சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல்

Sep 18, 2018 12:22 PM 641

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட இரண்டரை கோடி ருபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு தங்கம் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைகளின் போது தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், துபாயில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளிடம் சோதனை நடைபெற்றது.பின்னர் விமானத்தின் அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்த போது, கழிப்பறையில் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

8 கிலோ தங்கக் கட்டிகள் கைப்பற்றிய அதிகாரிகள், இவற்றை கடத்தி வந்தது யார் என்பது பற்றி விசாரித்து வருகின்றனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு இரண்டரை கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted