டிடிவி . தினகரனின் எண்ணம் ஈடேறாது- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

Sep 22, 2018 03:09 AM 482

”ஆட்சி நீடிக்காது என்ற டிடிவி தினகரனின் எண்ணம் ஈடேறாது” என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,ஸ்டெர்லைட் ஆலையை திரும்பவும் திறக்க ,சட்டத்தில் இடம் இல்லாத அளவுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ க்கள் குறித்த தீர்ப்பு வெளியான பிறகு ஆட்சி கவிழும் என டிடிவி தினகரன் கூறியிருப்பதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு , அது அவரது சொந்த கருத்து என்றார்.அவரது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

 

 

Comment

Successfully posted