பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை

Jul 18, 2018 12:57 PM 4452

சின்னத்திரையில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பனியாற்றி வந்த பிரயங்கா, சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், பிரயங்காவுக்கும், அவரது கணவருக்கும் இடையே சில மாதங்களாகவே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த வளசரவாக்கம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தந்தனர். இதனிடையே, பிரியங்காவிற்கு குழந்தை இல்லாததால், குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted