புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு

Jul 10, 2018 12:19 PM 1105

தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கோவை, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இது, மேலும் வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் நேற்றிரவு சில இடங்களில் சாரல் மழை பெய்தநிலையில், மாலையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் காற்று அதிகமாக வீசும் என்றும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted