புழல் சிறைக்குள் டி.வி.,க்கள், எஃப்.எம்.கள் பறிமுதல்

Sep 14, 2018 09:30 AM 470

சிறைக்குள் கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்துவதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சிறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் புழல் சிறையில் இருந்து 18 டி.வி.,க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையை அடுத்த புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சிறைத்துறை டிஐஜி முருகேசன் தலைமையில் புழல் சிறையில் உள்ள 24 உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள், அங்குள்ள கைதிகளின் அறைகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் முதல் வகுப்பறையில் 18 டி.வி.,க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 2 எப்.எம் ரேடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

Related items

Comment

Successfully posted