சதாம் உசேனுக்கு நேர்ந்த கதி தான் நேரிடும் - ட்ரம்புக்கு ஈரான் அதிபர் எச்சரிக்கை

Sep 22, 2018 09:50 PM 563

பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை வித்தது. இதன் காரணமாக ஈரான் கடுமையான பொருளாதார பின்னடைவை சந்தித்து வருகிறது. விலைவாசியும் பல மடங்கு அதிகரித்து வருவதால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானுடன் வர்த்தக உறவு வைத்துக் கொள்ள கூடாது எனவும் அமெரிக்க நிர்பந்தித்து வருகிறது. இந்நிலையில், நாட்டு மக்களுடன் வானொலி மூலம் உரையாற்றிய ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி, சதாம் உசேனுக்கு ஏற்பட்ட அதே கதிதான் அமெரிக்காவுக்கும், டோனல்ட் டிரம்புக்கும் ஏற்படும் என்றும் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பயந்து ஏவுகணைகளை கைவிட முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Comment

Successfully posted