நடிகை வரலட்சுமி சாடல்

Jul 19, 2018 04:38 PM 797

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களை தூக்கில் போட வேண்டும் என நடிகை வரலட்சுமி சாடியுள்ளார். சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது சிறுமி 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட 17 பேரும் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு வாதாட எந்த வழக்கறிஞர்களும் முன்வரவில்லை. இதுகுறித்து நடிகை வரலட்சுமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இதுபோன்று தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்றார். பாலியல் குற்ற மிருகங்களின் முகங்களை எதற்காக மறைக்கிறீர்கள் என்றும் அவல் கருத்து தெரிவித்துள்ளார்

Comment

Successfully posted