தமிழக மீனவர்கள் 8 பேருக்கு நீதிமன்ற காவல்

Aug 23, 2018 03:58 PM 597

 

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தை சேர்ந்த மரிய பாக்கியத்திற்கு சொந்தமான படகில், கடந்த சனிக்கிழமை 8 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். வத்தலகுண்டு தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டியதாகக் கூறி, படகுகளுடன் 8 மீனவர்களையும் சிறை பிடித்தனர். கல்பிட்டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்கள் 8 பேரையும், வரும் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comment

Successfully posted