சலுகை விலையில் சாரு நிவேதிதாவின் புத்தகங்கள்... இவ்வளவு குறைவா?

Sep 28, 2018 09:00 AM 649

எழுத்துலகின் கலகக்காரனாக அறியப்படும் சாரு நிவேதிதாவின் இரண்டு புதிய புத்தகங்கள் வெளிவர உள்ளன. அவற்றை முன்பதிவு திட்டத்தின் கீழ் குறைந்த விலைக்கு தரும் முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளார் சாரு நிவேதிதா.

சமீபத்தில் அவர் ஜீரோ டிகிரி என்ற பதிப்பகம் ஒன்றை துவக்கினார். அந்த பதிப்பகத்தின் முன்பதிவு திட்டங்கள் வாயிலாக தன்னுடைய புத்தங்களை இளம் வாசகர்களிடம் கொண்டு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி திசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள் என்ற இரண்டு புதிய புத்தகங்கள் வரவுள்ளன. திசை அறியும் பறவைகள் புத்தகத்தின் விலை ரூ.350. ஆனால் முன்பதிவு திட்டத்தில் இதன் விலை ரூ.250 மட்டுமே. அதேபோன்று நாடோடியின் நாட் குறிப்புகள் புத்தகத்தின் விலை ரூ.200. முன்பதிவு திட்டத்தில் இதன் விலை ரூ.150 மட்டுமே.

திசை அறியும் பறவைகள் நூலில் இடம்பெறும் கட்டுரைகள் பல்வேறு பொது விவகாரங்கள் குறித்து எழுதப்பட்டவையாகும். வாசிப்பின் இன்பத்தை நல்கும் அவரது மொழிநடையும், தான் வாழும் காலம் குறித்து அவர் கொண்டிருக்கும் மாறுபட்ட பிரக்ஞையும் இக்கட்டுரைகளின் வசீகரமாக இருக்கிறது. அதேபோன்று நாடோடியின் நாட்குறிப்புகளும் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வரலாறாய் மாறிய சம்பவங்களை ரத்தமும், சதையுமாய் அணுகுகிறது.

நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், அரசியல் கட்டுரை தொகுப்புகள், நாடகம், சினிமா விமர்சனம், கேள்வி பதில், நேர்காணல்கள் என பல தளங்களில் இயங்கி வருபவர் சாரு நிவேதிதா.

அவரது திசை அறியும் பறவைகள், நாடோடியின் நாட்குறிப்புகள் நூல்களை வாங்க ttps://tinyurl.com/budle-nadodi-thisai என்ற இணையதளத்தை அணுகலாம்.

Related items

Comment

Successfully posted