நடிகை தற்கொலை - 12 ஆண்டுகளுக்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத தீர்ப்பு!

Sep 06, 2018 05:56 PM 771

 

சின்னத்திரை தொடர்களில் வெற்றிநடை போட்டவர் வைஷ்ணவி. மௌனம் பேசியதே படத்தில் முக்கிய காட்சிகளில் நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றவர். இவர் செய்த பாவம் ஏற்கனவே திருமணமான நடிகர் தேவ் ஆனந்துடன் நட்பாக பழகியது தான். 2006 ஆம் ஆண்டு தனது வீட்டில் துப்பட்டாவில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து உயிரை விட்டார். இந்த விபரீத முடிவிற்கு காரணம் நடிகர் தேவி ஆனந்த் தான் என வைஷ்ணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து தேவ் ஆனந்த் கைது செய்யப்பட்டார். இவருக்கு மகளிர் நீதிமன்றம் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கிய நிலையில், அந்த தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2011 ஆம் ஆண்டே இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் இன்று அந்த தண்டனை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்போது வைஷ்ணவியின் ரசிகர்கள் மனதில் எழும் கேள்வி யார் குற்றவாளி என்பது தான்.

Comment

Successfully posted