மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 24 பேர் பணியிட மாற்றம்

Aug 24, 2018 12:11 PM 757

 

பள்ளிக்கல்வி, தொல்லியல், கைத்தறி, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட 13 துறைகளின் செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அரசு பாடத்திட்ட செயலாளர் உதய சந்திரன் தொல்லியத் துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று, சென்னை, திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு ஆகிய 8 மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஆட்சியராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார் . மதுரை மாவட்ட ஆட்சியராக நடராஜன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சிரயாக வீர ராகவ ராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Comment

Successfully posted