வரும் 19-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

Jul 16, 2018 03:36 PM 768

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளின் உபரி நீர், மேட்டூர் அணைக்கு  திறந்துவிடப்பட்டது. கனிசமாக உயரத்தொடங்கிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 89 புள்ளி 18 அடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 99,372 கன அடியாகவும் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் பழனிச்சாமி, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வரும் 19-ஆம் தேதி தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பா பருவத்தில் விவசாயிகள் நீண்டகால நெல் ரகங்களை சாகுபடி செய்வதற்கேற்ற வகையில் சி.ஆர் 1009, சி.ஆர் 1009 சப்-1, ஏ.டி.டி 49 போன்ற நெல் ரகங்களை வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்க வேண்டும் என  அறிவுறுத்திய முதலமைச்சர், யூரியா உள்ளிட்ட ரசாயன உரங்கள் வேளாண் கூட்டுறவு கடன் சங்கள்களில் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Comment

Successfully posted