ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய வீரர் சவுரப் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

Aug 21, 2018 02:42 PM 852

ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கப் பதக்கமும், சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில், இந்தியாவின் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று அசத்தினார்.

மற்றொரு இந்திய வீரரான அபிஷேக் வர்மா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில், சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இதன் மூலம் இந்திய அணி 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன், பதக்க பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது. இதனிடையே தங்கம் வென்ற இந்திய வீரர் சவுரப் சவுத்ரிக்கு உத்தரபிரதேச மாநில அரசு 50 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.

ஆசிய போட்டி விளையாட்டுப்போட்டி சவுரப் சவுரப்சவுத்ரி தங்கப்பதக்கம் Asian Games Sourabh Chowdhury gold medal

Comment

Successfully posted