நாய் சாப்பிடுமா இதை?- கொந்தளித்த இலங்கை அதிபர்

Sep 12, 2018 10:06 PM 588

சமீபத்தில் நேபாளத்தில் நடந்த பிம்ஸ்டெக் மாநாட்டை முடித்துக்கொண்டு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா விமானத்தில் கொழும்பு திரும்பினார் . அப்போது விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் இருந்த முந்திரி, தரம் குறைந்ததாக இருந்துள்ளது. இதனை குறிப்பிட்டுத்தான் , ‘விமானத்தில் வழங்கப்பட்ட முந்திரியை நாய் சாப்பிடுமா?' என கூறியுள்ளார்.

இதை அப்படியே விட்டுவிடாமல் , விமான நிறுவனத்திற்கு முந்திரிகள் சப்ளை செய்தது யார்? என்று விசாரித்து குடைந்தெடுத்துவிட்டார். இந்த விவகாரத்தில் துபாயை சேர்ந்த முந்திரி சப்ளையருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம்.

Related items

Comment

Successfully posted