நாடு முழுவதும் உள்ள மிஷனரி அப் சேரிட்டியின் குழந்தைகள் காப்பகங்களில் சோதனை நடத்த வேண்டும்

Jul 17, 2018 12:22 PM 308

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மிஷனரி அப் சேரிட்டியின் கீழ் இயங்கி வரும் குழந்தைகள் காப்பகத்தில் 3 குழந்தைகள் விற்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, மூன்று கான்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் சோதனை நடத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. குழந்தைகள் காப்பகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா, குழந்தைகள் தத்தெடுப்பு உள்ளிட்ட விவகாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Comment

Successfully posted