மோடி வெளிநாடு சுற்றுப்பயண விவரம்

Jul 20, 2018 11:03 AM 665

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி முதல், 2018ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கான செலவை மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் தாக்கல் அறிக்கை தாக்கல் செய்தார். வெளிநாட்டு சுற்றுப் பயணத்திற்கான விமானத்தை பராமரிக்க மொத்தம் ஆயிரத்து 88 கோடியே 42  லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் விமானங்களுக்கு 387 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமராக கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது முதல் 42 முறை வெளிநாடுகளுக்கு மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும்  84 வெளிநாடுகளுக்கு அவர் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted