பின் இருக்கை பயணிகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்

Aug 24, 2018 03:29 PM 525

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க உத்தரவிடக் கோரி, யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இன்றைய விசாரணையின் போது, ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், மோட்டார் வாகன சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்துவதாகவும், ஹெல்மெட் அணிவதன் கட்டாயம் குறித்தும் பத்திரிகை, தொலைக்காட்சி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து விசாரணையை 31ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தர விட்டார்.

Comment

Successfully posted