கொசு மருந்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் நிலானி!

Sep 20, 2018 07:23 PM 565

சின்னத்திரை நடிகை நிலானி, கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலானியின் ஆண் நண்பரும், உதவி இயக்குநருமான காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு நிலானிதான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் தான் தவறு எதுவும் செய்யவில்லை என விளக்கம் அளித்த நிலானி, லலித் குமார் குறித்து சில சர்ச்சைக்குரிய தகவல்களையும் தெரிவித்தார்.

இதை மறுத்த லலித்குமார் குடும்பத்தினர், நிலானி பற்றிய சில ரகசிய தகவல்களை வெளியிடப்போவதாக தெரிவித்தனர். இந்தநிலையில் நடிகை நிலானி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில், மயங்கி கிடந்த நிலானியை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நிலானி தற்கொலை முயற்சி குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related items

Comment

Successfully posted