மிசா கைதியாக ரஜினி

Sep 24, 2018 02:27 PM 444

காலா படத்தைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தில், ரஜினி தாதா வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. டார்ஜிலிங் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ரஜினியின் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் ரஜினி கையில் ஒரு செம்பு காப்பு இருப்பதும், அதில் மிசா 109 என்று பச்சை குத்தப்பட்டு இருப்பதும் தெரிகிறது.

இதனால், ரஜினி மிசா கைதியாக நடிக்கலாம் என்று செய்தி வெளியாகி உள்ளது

Comment

Successfully posted