“ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாடலை ரீமிக்ஸ் செய்ய திட்டம்?

Jul 28, 2018 11:52 AM 666

நீயா படத்தின் தலைப்பை கேட்டதும் பலருக்கு நினைவுக்கு வரும் ஓன்று ‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாடல் தான். கடந்த 1979ஆம் ஆண்டு கமல் - ஸ்ரீப்ரியா நடிப்பில் வெளிவந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 39 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘நீயா- 2’ புதிய பரிமாணத்தில் தயாராகி வருகிறது. இதில், நாயகனாக ஜெய் நடிக்க, வரலட்சுமி, கத்ரீன் தெரசா, ராய் லட்சுமி ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகிறார்கள். எல்.சுரேஷ் இயக்கி வருகிறார். இப்பாடலின் உரிமையை ‘நீயா 2’ படக்குழு வாங்கியுள்ளது. இதனை ரீமிக்ஸ் செய்யலாமா அல்லது  அப்பாடலை மீண்டும் படமாக்கலாமா என்ற ஆலோசனையில் படக்குழு இறங்கியுள்ளது.

Comment

Successfully posted