எந்த அரசு பள்ளியையும் மூடும் எண்ணம் இல்லை - செங்கோட்டையன்

Sep 24, 2018 03:18 PM 490

ஈரோடு மற்றும் கோபிசெட்டிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட  அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, தமிழகத்தில் குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள அரசு பள்ளிகளை மூடும் எண்ணமோ, அல்லது மற்ற பள்ளிகளுடன் இணைக்கும் எண்ணமோ தமிழக அரசுக்கு இல்லை என்று கூறினார்.

பள்ளிகளை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக கூறி போராட்டம் நடத்துபவர்கள், அந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டார்.

Comment

Successfully posted

Super User

good


Super User

எங்கள்சாதனைசெம்மல்.இனியகாலைவணக்கம்