மோடி மீது நடிகை ரம்யா மீண்டும் சர்சை டிவிட்

Sep 28, 2018 06:17 AM 212

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவரான 'குத்து' ரம்யா, பிரதமர் மோடி குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட, அக்கட்சியின் பல்வேறு தலைவர்களும் பாஜகவிற்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி பிரதமர் மோடியை, திருடன் என விமர்சித்து, சர்ச்சைக்குரிய புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டு நடிகை ரம்யா பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து, உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் ரம்யாவுக்கு எதிராக தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது பற்றியும் துளியும் கவலைப்படாத ரம்யா, தற்போது வெளியாகியுள்ள “தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்” படத்தின் டிரைலரில், நடிகர் அமீர்கான் பேசிய “நம்பிக்கை துரோகம் என்பது எனது சுபாவம்” என வசனத்தை பதிவிட்டு, ரபேல் விவகாரத்தில் மோடியை மீண்டும் விமர்சனம் செய்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திற்கு மோடி நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாகவும், நடிகை ரம்யா விமர்சனம் செய்துள்ளார். தற்போது, நடிகை ரம்யாவின் டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comment

Successfully posted