பிக் பாஸ் சீசன்-2 வில் டைட்டில் வின்னர் ஆனார் நடிகை ரித்விகா

Oct 01, 2018 10:14 AM 397

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி Bigg Boss. ஒரு வீட்டில்16 போட்டியாளர்களை களமிறக்கி, வீடு முழுவதும் கேமராக்களை வைத்து, நல்லவர் யார், கெட்டவர் யார் என்று பொதுமக்களே ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியாக Bigg Boss திகழ்ந்தது.

Bigg Boss சீசன்-1ல், ஆரவ் வெற்றிப் பெற்ற நிலையில், ஜுன் மாதம் 17ஆம் தேதி Bigg Boss சீசன்-2 தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், சென்றாயன், பாலாஜி, நித்யா, பொன்னம்பலம், ஷாரிக், மகத், மமதி சாரி, வைஷ்ணவி, டேனி, ரம்யா என்.எஸ்.கே, அனந்த் வைத்தியநாதன், யாஷிகா ஆனந்த் ஆகிய 16 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பல்வேறு டாஸ்குகள் வழங்கப்பட்ட நிலையில், 100 நாட்களை கடந்து, இந்த சீசன் 105 நாட்கள் வரை சென்றது. வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்ட நிலையில் நடிகைகள் ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்கள். பொதுமக்கள் அளித்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் 30 லட்சம் வாக்குகளை பெற்ற ரித்விகா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

Related items

Comment

Successfully posted