பணி நியமன ஆணை - முதலமைச்சர் வாழ்த்து

Sep 15, 2018 12:52 PM 1256

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 215 பேரில் அடையாளமாக 7 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


நிதித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் உள்ளாட்சி தணிக்கைத் துறை மற்றும் அரசுத் துறை நிறுவன தணிக்கைத் துறை ஆகிய துறைகளுக்கு அரசு தேர்வாணையத்தின் மூலம் 215 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 7 பேருக்கு அடையாளமாக பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Comment

Successfully posted