எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மிக எழுச்சியாக அமையும் -ஜெயக்குமார்

Sep 04, 2018 05:40 PM 539

சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகள், அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், வரும் 30ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ள விழாவில் தேசிய தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மிக எழுச்சியாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

Comment

Successfully posted