எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு அடிக்கல் நாட்டு விழா

Aug 23, 2018 11:40 AM 955

 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள், ஜனவரி 17ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த ஜூன் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நினைவு வளைவு அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தின் அருகில் 66 அடி அகலமும் 52 அடி உயரமும் கொண்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவு அமைக்கப்படவுள்ளது. இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் .பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, செங்கோட்டையன் உள்ளிட்டோரும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக எம்.எல்..க்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

Comment

Successfully posted