பல கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்கள் துவக்கம்

Jul 17, 2018 01:12 PM 892

சென்னை தலைமைசெயலகத்தில் கானொளி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் 16 கோடி  மதிப்பீட்டில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம், நூலக கட்டிடம், தியானமண்டபம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். மேலும் சென்னையில் உலக junior squash சாம்பியன்சிப் போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு squash ராக்கெட் சங்கத்திற்கு 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படுள்ள 200 படுக்கைகளை கொண்ட மருத்துவமனை, தேர்வு கூடம், விடுதி, உள்ளிட்ட கட்டடங்களை காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார். மேலும் தேனி, மதுரை, திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 10 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமணை கட்டடங்களை திறந்துவைத்தார். பால்வளத்துறை சார்பில் காஞ்சிபுர மாவட்டம் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் 34 கோடி ரூபாய் மதிப்பீட்ஐடில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்ப பால் பதனிடும் தொழிற்சாலையை காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும் 15 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு,  பால்வளம் மற்றும் மீன்வளத்துறை கட்ட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிகாட்சி மூலம் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சயில் அமைச்சர்கள் ஜெயக்குமார், உடுமலை ராதாகிருசுணன், ராஜேந்திர பாலஜி , விஜயபாஸ்கர், பென்சமின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Comment

Successfully posted