ஜெ.வுக்கு சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை - எய்ம்ஸ் மருத்துவர்கள்

Aug 24, 2018 03:38 PM 548

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளது. இந்தநிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜி.சி கில்னானி, அஞ்சன்டிரிகா, நிதிஷ் நாயக் ஆகியோர் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். அவர்களிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், ஜெயலலிதாவுக்கு தாங்கள் சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேரும் மீண்டும் இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர். அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர்.

Comment

Successfully posted