டி.டி.வி தினகரன் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்குதல்

Jul 18, 2018 02:12 PM 617

சென்னை ஆர்.கே நகர் சட்டமன்ற தொகுதிக்கு டி.டி.வி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வருகை தந்துள்ளனர். இவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை கட்டுக்குள்கொண்டுவர போலீசார் முயற்சித்த நிலையில், போலீசார் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பெண் போலீசார் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், ஆர்,கே நகர் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதனால், அங்குள்ள கடைகள் மூடப்பட்டன. இதனையடுத்து பாதுகாகப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

Comment

Successfully posted

Super User

அந்த 420. போண்டா வாயனைRk நகர் தொகுதி மக்கள் மீண்டும் மீண்டும்நாங்கல் விரட்டி அடிப்போம்