டி.டி.வி. தினகரன் மீது அமைச்சர் எஸ்.பி வேலுமணி பாய்ச்சல்

Oct 06, 2018 01:17 PM 572

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அண்ணன் தம்பி போல பழகி வருவதாகவும், ஆனால் தினகரன் சூழ்ச்சியை கையாண்டு வருவதாகவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்று கூறினார். இதனால் ஏற்பட்டுள்ள பயத்தின் காரணமாக தினகரன் சூழ்ச்சியினை கையாண்டு வருவதாக அமைச்சர் வேலுமணி குற்றம் சாட்டினார்.

முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் அண்ணன் தம்பி போல பழகி வருவதாக என்று கூறிய அவர், இதற்கான உரிய விளக்கத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அளித்து விட்டதாகவும் தெரிவித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் 10 ஆண்டுகள் வரை விரட்டி அடிக்கப்பட்டவர் தினகரன் என்பதை சுட்டிக் காட்டிய அவர், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டார்.

Comment

Successfully posted