ரூ.103 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Jul 16, 2018 03:46 PM 632

ன்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட 6 துறைகளுக்கான நலத்திட்டங்களை முதலமைச்சர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். 103 கோடி 4 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த நடத்திட்டப்பணிகள், அம்பத்தூர், ஆலந்துர் உள்ளிட்ட பகுதிகளில் 6 பூங்காக்கள், சிறுவர் விளையாட்டு அரங்கங்கள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் ஆகியவற்றையும் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இதேபோல், திருச்சிராப்பள்ளி, தருமபுரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 160 கோடி 34 லட்சம் மதிப்பீட்டில் 3 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் 7 ஆற்றுப்பாலங்களையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் எஸ்பி வேலுமணி, அமைச்சர் பென்ஜமின், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Comment

Successfully posted