உ.பியில் கனமழை - பலி எண்ணிக்கை 49ஆக அதிகரிப்பு

Jul 28, 2018 03:12 PM 432

கடந்த சில நாட்களாக உத்தரப்பிரதேச    மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்றும் கன மழை கொட்டித் தீர்த்தது. மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனிடையே கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் இடி மின்னல் தாக்கி, ஆக்ராவில் 5 பேர், மெயின்புரியில் 4 பேர், முசாபர் நகர், கஸ்கஞ்ச் பகுதிகளில் 3 பேர்  உள்பட பலர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், பலி எண்ணிக்கை 49ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மதுராவில் 19 சென்டி மீட்டர் மழை பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted