‘முதல்வராக வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு நனவாகாது’ - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Apr 03, 2021 07:03 AM 584

தி.மு.க தலைவர் ஸ்டாலின் 24 மணி நேரமும் முதலமைச்சர் கனவிலேயே மிதப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பாட்டியில், வீரபாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜமுத்துவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, பேசிய அவர், ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி என குடும்பத்தினர் சுற்றிசுற்றி வந்தாலும், சேலம் அதிமுகவின் கோட்டை என உறுதிபடத் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் சேலத்தை எஃகு கோட்டையாக மாற்றவேண்டும் எனவும், மக்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். 

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 24 மணிநேரமும் முதலமைச்சர் கனவிலேயே மிதப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.

மக்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் குறைகளை தன்னிடம் நேரில் தெரிவிக்கலாம் என கூறிய முதலமைச்சர், ஸ்டாலின் வீட்டு கேட்டை தி.மு.க.வினரே கூட தொட முடியாது எனவும் தெரிவித்தார்.

ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதே அராஜகத்தில் ஈடுபடும் தி.மு.க.வினர், பெண்களை கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் பேசி வருவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாகத் திகழ்வதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

Comment

Successfully posted