டிக்டாக் செயலிக்கு அடிமையாகி வரம்பு மீறும் இளைஞர்கள்

Feb 09, 2019 06:21 PM 942

சென்னை அசோக் நகர் காவல் நிலையத்திலிருந்து வெளியில் வருவதுபோல் டிக்டாக் வீடியோ வெளியிட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சினிமா பாடல்கள், டயலாக் ஆகியவற்றை பயன்படுத்தி டிக்டாக் செயலி மூலம் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை சிலர் பெருமையாக கருதுகின்றனர். ஒருகட்டத்தில் டிக்டக் செயலிக்கு அடிமையாகி தாங்கள் எந்த ஆடியோக்களை பயன்படுத்தி வீடியோ எடுக்கின்றோம் என்பதை கூட பொருட்படுத்தாமல் சர்ச்சையில் சிக்கும் சம்பவங்களும் நிகழுவதுண்டு. இந்தநிலையில் ரஞ்சித் என்ற இளைஞர் சென்னை அசோக்நகர் காவல் நிலையத்திலிருந்து வெளியில் வருவதுபோன்ற டிக்டக் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அந்த இளைஞரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Comment

Successfully posted