'விஸ்வாசம்' படத்தில் அஜித்துக்கு இரண்டுவிதமான கெட்டப்புகள்

Jul 17, 2018 05:57 PM 721

விவேகம் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும் திரைப்படம் 'விஸ்வாசம்'.. இந்த திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளது படக்குழு .     இந் நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு இரண்டுவிதமான கெட்டப்புகள் என்றும் ஒன்று வயதான தோற்றம் இன்னொன்று ஸ்டைலிஷான இளமை தோற்றம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், முக்கிய வேடத்தில் நடிக்கும் தம்பி ராமையாவுக்கு இளமை மற்றும் முதிய தோற்றம் என்பது தற்போது தெரியவந்துள்ளது. நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகிபாபு, ரோபோ சங்கர், போஸ் வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.  சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக வெற்றியும், படத்தொகுப்பு பணியில் ரூபன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். 'விஸ்வாசம்' படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

Comment

Successfully posted