‘எல்லா நடிகராலும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது’ - ஜெயக்குமார்

Nov 08, 2018 11:05 AM 281

எல்லா நடிகராலும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழறிஞர் வீரமாமுனிவரின் 338-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன் உள்ளிட்டோர் வீரமாமுனிவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "சர்கார்" படத்தில் திணிக்கப்பட்டுள்ள அரசியல் கருத்துகள் குறித்து விமர்சித்தார். தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள சாமானிய மக்கள் மீது கருத்துகளை திணிக்கக் கூடாது என, விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

 

Comment

Successfully posted