போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த 'அழகு ராணி'

Sep 25, 2021 12:56 PM 6837

தெலங்கானாவில், நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேசை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தெலங்கானாவில் உள்ள மஞ்சேரி (Mancherial) மாவட்டத்தில், புதிய நகைக் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள சென்றார். கீர்த்தி சுரேசை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கொளுத்தும் வெயிலில் வியர்த்து விறுவிறுக்க நெருக்கியடித்து கொண்டு காத்துக் கிடந்தனர். கூட்ட நெரிசலில் மிதந்தபடி சென்ற காரை கண்டு உற்சாக குரல் எழுப்பியவர்களை பார்த்து கீர்த்தி சுரேஷ் கையசைத்து உற்சாகப்படுத்தினார். கொரோனா தொற்றால் வீட்டுக்குள் முடங்கி கிடந்தவர்கள், நோய் தொற்றை மட்டுமின்றி முகக்கவசம் மற்றும் தனி பாதுகாப்பு இடைவெளியையும் மறந்து உற்சாக குரல் எழுப்பினர். கட்டுக்கடங்காத கூட்டத்திற்கு மத்தியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் வலம் வந்த அவருடன் போட்டோ எடுத்து கொள்ள ரசிகர்களுடன் போலீசாரும் போட்டி போட்டனர். கீர்த்தி சுரேஷ் வருகையால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Comment

Successfully posted