ஜுனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளான இன்று, ஆர்.ஆர்.ஆர் போஸ்டரை வெளியிட்ட படக்குழு

May 20, 2021 06:46 PM 5536

ராஜமெளலி பிரமாண்டமாக இயக்கிவரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஜூனியர் என்.டி.ஆருடன், ராம் சரண், அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி, ஆலியாபட் ஆகியோர் நடிக்கும் ஆர் ஆர் ஆர் படம், சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.

சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜூ, கொமராம்பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்தில், கொமராம்பீம் பாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜுனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளான இன்று, அவரது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

Comment

Successfully posted