அட்டகாசம் செய்து வந்த 'அரிசி ராஜா' காட்டு யானை பிடித்த வனத்துறையினர்

Nov 15, 2019 11:13 AM 188

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானை 'அரிசி ராஜா', வரகளியாறு யானைகள் பயிற்சி முகாமில் கொண்டு சேர்க்கப்பட்டது.

பொள்ளாச்சி அருகே உள்ள அர்த்தனாரி பாளையம் கிராமத்தில் விளை நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை 'அரிசி ராஜா'-வை பிடிக்க 60க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மூன்று நாட்களாக போராடினர். இந்த நிலையில், தென்னந்தோப்பில் இருந்த காட்டு யானையை, மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கும்கி யானை உதவியுடன் அரிசி ராஜா யானை, வாகனத்தில் ஏற்பட்டு டாப் ஸ்லீப் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் டாப் ஸ்லீப்பில் உள்ள வரகளியாறு யானைகள் பயிற்சி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட அரிசி ராஜா, அங்கிருந்த மரக் கூண்டில் அடைக்கப்பட்டது.

Comment

Successfully posted