தேர்வு எழுதமுடியாமல் விடுபட்ட +2 மாணவர்களுக்கு ஜூலை 27-ம் தேதி தேர்வு!!

Jul 09, 2020 09:37 AM 508

மார்ச் 24ம் தேதி தேர்வு எழுத முடியாத பிளஸ் டூ மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 24ம் தேதி நடைபெற்ற 12ம் வகுப்பு இறுதி நாள் பொதுத்தேர்வில் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டதால், பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்தேர்வு வரும் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயின்ற பள்ளியிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும், தேர்வுக்கான நுழைவுச்சீட்டை வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை, dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், அவரவர் பயின்ற பள்ளிகளிலும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் வந்து செல்ல போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையம் அமைக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted