1 மணி நேரத்திற்கு 45 விமானங்கள் - சென்னை விமான நிலையத்தில் பணிகள் துவக்கம்

Sep 28, 2018 06:08 PM 343

ஒரு மணி நேரத்திற்கு 45 விமானங்கள் வந்து செல்லும் வகையில் சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சென்னை விமான நிலைய இயக்குநர் சந்திரமவுலி, ஒருங்கிணைந்த விமான நிலையமாக விரிவாக்கும் பணிகள் 42 மாதங்களில் முடிவடையும் என்று தெரிவித்தார்.

நான்காம் முனையம், விமானங்கள் புறப்பாடு முனையமாக மாற்றப்படும் என்றும் அவர் கூறினார். தற்போது 4வது முனையம், விமானங்கள் வரும் முனையமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted