சென்னையில் 1 கோடியே 36 லட்சம் ரூபாய் பறிமுதல்

Mar 25, 2019 10:02 AM 343

சென்னை வால்டாக்ஸ் சாலையில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்தவர்களை சோதனை செய்த காவல்துறையினர் 1 கோடியே 36 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த பாஷா, ஸ்ரீநிவாசலு, ஆஞ்சிநேயலு, ஷேக் சலீம் என்பதும் இன்று காலை தான் ஆந்திராவிலிருந்து சென்னை வந்ததும் தெரிய வந்தது.

அவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று திருநீர் மலை பகுதியில் தீவிர சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 72 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted