வாக்காளர் சரிபார்ப்புத் திட்டத்தில் இதுவரை 1.87 கோடி வாக்காளர்கள் திருத்தம்: சத்யபிரதா சாஹூ

Oct 15, 2019 04:38 PM 227

வாக்காளர் சரிபார்ப்புத் திட்டத்தின் மூலம் இதுவரை 1 கோடியே 87 ஆயிரம் வாக்காளர்கள் திருத்தம் செய்துள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், அதிகபட்சமாகப் பெரம்பலூர் மாவட்டத்தில் 86% பேர் வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்துள்ளதாகவும், சென்னையில் மொத்த வாக்காளர்களில் 8% பேர் சரிபார்த்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் இதுவரை மொத்தம் 91 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பணம், நகை மற்றும் பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Comment

Successfully posted