1 லட்சத்து 40 ஆயிரம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

Oct 21, 2018 12:05 PM 236

தேனி மாவட்டத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர் நரசிங்கபுரத்தில் கள்ள நோட்டுடன் நின்று கொண்டிருந்த இருந்த குமரேசன், வசந்தகுமார்,பழனிகுமார் ஜக்கம்மாள் பட்டியைச் சேர்ந்த பால்ராஜ் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் ரூபாய் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை சாய் பாபா காலனியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 2 கோடி ரூபாய் கள்ள நோட்டுடன் சுந்தர் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது கைதானவர்கள் சுந்தரின் கூட்டாளிகள் என்பது தெரிய வந்துள்ளது.

சுந்தர் கைது செய்யப்படுவதற்கு முன்பு அவரிடம் இருந்து கள்ள நோட்டுகளை பெருமளவில் வாங்கி வைத்து கொண்டு புழக்கத்தில் விட்டதும் தெரிய வந்துள்ளது. தேனி மாவட்டத்தில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted