இந்தியாவில் 1.25 லட்சம் பேர் பாதிப்பு!

May 23, 2020 02:43 PM 789

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக 6 ஆயிரத்து 654 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது.

மகாராஷ்டிராவில், நேற்று மட்டும் 2 ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  44 ஆயிரத்து 582 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 14 ஆயிரத்து 753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 ஆயிரத்து 128 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குஜராத்தில் 13 ஆயிரத்து 268 பேரும்,  டெல்லியில் 12 ஆயிரத்து 319 பேரும், ராஜஸ்தானில் 6 ஆயிரத்து 494 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 6 ஆயிரத்து 170 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 5 ஆயிரத்து 735 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோன்று, மேற்குவங்கம், ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் இதுவரை 51 ஆயிரத்து 784 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3 ஆயிரத்து 720 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

Comment

Successfully posted