தேர்தல் பாதுகாப்புப் பணியில் 1.58 லட்சம் பேர்!

Apr 05, 2021 07:04 AM 355

தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சத்து 58 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளதையொட்டி, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறையினர் 1 லட்சத்து 5 ஆயிரம் பேரும், காவல்துறை அல்லாத 34 ஆயிரத்து 130 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிற மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறையினர் 6 ஆயிரத்து 350 பேர் உட்பட மொத்தம் 18 ஆயிரத்து 761 பேரும் பாதுகாப்பு பணியில் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம், 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


Comment

Successfully posted