செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து மீது லாரி மோதல் - சுமார் 10 பேர் காயம்

Dec 16, 2018 03:10 PM 376

செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு புறவழி சாலையில் சென்னையிலிருந்து போளூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அவசர ஊர்திக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனடியாக அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். 

Comment

Successfully posted