10 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்

Mar 16, 2019 12:38 PM 76

கேரள மாநிலம் மூணாறு அருகே காவல்துறையினர் நடத்திய சோதனையில், தென்மலை லோயர் டிவிஷனில் 10 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் குண்டுமலை எஸ்டேட் பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக, போதை தடுப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தென்மலை தோட்டத்தின் பகுதியில் வசிக்கும் துரைராஜ் என்பவரது வீட்டில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்து 10 லிட்டர் கள்ள சாராயத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்திருந்த துரைராஜ் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted