ராஜஸ்தானில் ஆற்றில் சிலையைக் கரைத்தபோது நீரில் மூழ்கி 10 பேர் உயிரிழப்பு

Oct 09, 2019 12:20 PM 136

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் துர்க்கா பூஜையையொட்டிப் பார்வதி ஆற்றில் சிலையைக் கரைத்தபோது நீரில் மூழ்கிப் பத்துப் பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் நேற்றுத் துர்க்கா பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் நிறைவில் அம்மன் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டுசென்று அங்குள்ள பார்வதி ஆற்றில் கரைத்தனர். அப்போது ஏராளமானோர் ஆற்றில் இறங்கிய நிலையில் ஆழமான பகுதிக்குச் சென்றவர்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் நீரில் மூழ்கிப் பத்துப் பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் உடல்கள் ஆற்றின் நீரோட்டப் பாதையில் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டன. தசரா கொண்டாட்டத்தின்போது 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தது தோல்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted