டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 10 தீவிரவாதிகள் கைது

Dec 26, 2018 06:49 PM 212

டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் 10 பேரை தேசிய விசாரணை முகமையை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள நகரங்களை குறிவைத்து ஐஎஸ்ஐஎஸ் அமைபினர் தாக்குதல் நடத்த இருப்பதாக தேசிய விசாரணை முகமைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து டெல்லியின் சீலாம்பூர், உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹா உள்ளிட்ட 16 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது 10 பேரை கைது செய்த அதிகாரிகள், அவர்கள் பதுக்கி வைத்திருந்த வெடி மருந்து, துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

இதனிடையே அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை கொல்ல சதி செய்திருந்த தீவிரவாதிகளை தற்போது கைது செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted